இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் மேலும் 58 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று
17:18 April 11
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 58 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீட்டிக்குமாறு வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம் முதலமைச்சர் பரிந்துரைத்துள்ளார். இது குறித்து இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்” என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் 58 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 9,527 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கரோனா தொற்றில் தமிழ்நாடு இரண்டாம் நிலையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...கேரள செவிலியர்களுக்கு தலை வணங்குகிறேன்!
TAGGED:
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு