இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், “கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மத்திய அரசு ஆய்வுக் கூட்டம் நடத்தியது. அதில் கரோனா வைரஸ் தாக்குதலைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அண்டைநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் மூலம் வருகை புரிந்த 3 ஆயிரத்து 223 பயணிகள் தீவிர பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அதற்காக விமான நிலையங்களில் நான்கு சோதனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கேனிங் வசதி உள்ளது.
கரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கியமான அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாம்பரம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஒரு சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை சீனாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு 579 பேர் வருகை தந்துள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பின் போது அவர்களில் 68 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக ஹூகான் பகுதியிலிருந்து நான்கு பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தொடர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்" என்றார். மேலும் பேசிய அவர், "தமிழ்நாட்டில் தற்போதுவரை கரோனா வைரஸ் பாதிப்பில்லை. கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள் வந்துள்ளன. அனுமதி கிடைத்தவுடன் வரும் 3ஆம் தேதி முதல் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க: சீனாவிலிருந்து தமிழ்நாடு வந்த 394 பேர் - கரோனா வைரஸ் குறித்து விஜய பாஸ்கர்