கரோனா வைரஸ் தமிழ்நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, சென்னையில் அதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக கரோனா அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்துவதற்காக மாநகராட்சி சார்பில் 18 கோவிட்-19 சுகாதார மையங்கள் உருவாக்கப்பட்டன.
தற்போது இந்த மையங்களில் புதிதாக 5 ஆயிரத்து 720 படுக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 4 ஆயிரத்து 450 படுக்கைகள் இருந்தன. புதிதாகச் சேர்க்கப்பட்ட படுக்கைகளைச் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்து 125 படுக்கைகள் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 மையங்களில் மேலும் 5,720 படுக்கைகள் சேர்ப்பு! - beds increased in chennai covid-19 care centres
சென்னை: மாநகராட்சி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 18 கோவிட்-19 கேர் சென்டரில் புதிதாக 5 ஆயிரத்து 720 படுக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5720-beds-
அதிகப்படுத்திய படுக்கைகளின் விவரம் பின்வருமாறு:
- செயின் ஜோசப் பொறியியல் கல்லூரி - 250
- ஐஐடி மெட்ராஸ் - 1,000
- வேலம்மாள் பொறியியல் கல்லூரி - 250
- லயோலா கல்லூரி - 200
- ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி - 200
- அண்ணா பல்கலைக்கழகம் - 1,500
- தங்கவேலு பொறியியல் கல்லூரி - 200
- சத்யபாமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி - 300
- குருநானக் கல்லூரி - 800
- டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி - 150
- மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரி - 300
- ஏ எம் ஜெயின் கல்லூரி - 200
- கே சி ஜி கல்லூரி - 100
- பிரசிடென்சி கல்லூரி - 500
- மகளிர் கிறித்துவக் கல்லூரி - 120
- வெள்ளையம்மாள் கல்லூரி - 150
- அண்ணா ஆதர்ஷ் கல்லூரி - 120
இதையும் படிங்க:வீடுகளிலிருந்து பணிபுரிய நீதிபதிகளுக்கு அனுமதி!