வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்களுக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, துபாய், இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த பயணிகளிடம் சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
ரூ.54.5 லட்சம் மதிப்புடைய தங்கம், பணம் பறிமுதல் - DUBAI
சென்னை: விமானநிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 5 பேரிடமிருந்து, ரூ.54.5 லட்சம் மதிப்புடைய தங்கம், வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
அப்போது, மதுரையைச் சேர்ந்த நாசா்தீன் (55), பக்ரூதீன் (25), முகமது நஷீப்துல்லா (25) ஆகிய பயணிகள் மடிக்கணினிகளுக்குள் தங்கக் கட்டிகளை மறைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ. 35.5 லட்சம் மதிப்புடைய 850 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், கடத்தல்காரர்களைக் கைது செய்தனர்.
இதேபோன்று, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்து பிலீப் (51),ஷேகா் (61) ஆகிய இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் உரிய ஆவணம் இன்றி தங்கள் கைப்பைகளில் கொண்டுவந்த ரூ.19 லட்சம் மதிப்புடைய யூரோ வெளிநாட்டுப் பணத்தைப் பறிமுதல் சுங்கத் துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.