சென்னை: மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை மொத்தம் சென்னையில் 6,34,793 நபர்கள் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5,71,387 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், தற்போது 54,685 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 7,132 நபர்களும்; அடுத்தபடியாக அண்ணா நகர் மண்டலத்தில் 6,720 நபர்களும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நோய்த்தொற்று அதிகரித்து வரும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் வீடுகளில் கரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு உதவி செய்வதற்காக, கூடுதலாக 535 களப்பணியாளர்களை மாநகராட்சி நியமித்துள்ளது.