சென்னை:இலங்கையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த 2 பெண் பயணிகள், சுற்றுலா விசாவில், இந்த விமானத்தில் வந்திருந்தனர்.
சுங்க அதிகாரிகளுக்கு இந்தப் பெண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். ஆனால் அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை. இதையடுத்து பெண் சுங்க அதிகாரிகள் 2 இலங்கை பெண் பயணிகளையும், தனி அறைக்கு அழைத்துச் சென்று, முழுமையாக பரிசோதித்த போது, அவர்களுடைய ஆடைகளுக்குள் மறைத்து, வைத்திருந்த பார்சல்களில், 516 கிராம் தங்கத் துண்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.