தமிழ்நாட்டில் உள்ள 56 ஆய்வகங்களில் 12,780 பேருக்கு இன்று சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 509 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரிகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 227 பேராக அதிகரித்துள்ளது.
தற்போது மருத்துவமனையில் 6,984 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று 42 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப்பெற்ற 41 வயது ஆண், அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 43 வயது ஆண், 48 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது.
இன்று 16 மாவட்டங்களில் 509 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் சென்னையில் அதிகபட்சமாக 380 பேருக்கும், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 25 பேருக்கும், திருவண்ணாமலையில் 23 பேருக்கும், கடலூரில் 17 பேருக்கும், விழுப்புரத்தில் 7 பேருக்கும், தேனி, திருநெல்வேலியில் தலா 5 பேருக்கும், அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேருக்கும், கரூர், மதுரை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், பெரம்பலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.