சென்னை: வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும்வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஐந்தாயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் எனவும், இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிட்ட பின்னர் நடத்தப்படும் என்றும் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார் .
சென்னை தேனாம்பேட்டையில், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்ககத்தில் மா. சுப்பிரமணியன் செய்தியாளரிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மிகப்பெரிய அளவில் பெய்துள்ளது. அதனால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியது, அந்த நீரை அகற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகின்றது.
முதலமைச்சர் தொடர்ந்து கடந்த ஆறு நாள்களாக நடவடிக்கைகள் மேற்கொண்டும், மீட்புப் பணிகளையும் செய்துவருகிறார். மழைக் காலத்தைத் தொடர்ந்து மக்கள் பாதிப்புக்குள்ளாகிற காய்ச்சல், சளி, சேற்றுப்புண், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைந்து ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் மருத்துவ முகாம்களை நடத்திட வேண்டுமென்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மருத்துவ முகாம்
தமிழ்நாட்டில் நேற்று (நவ. 12) 75 தனியார் மருத்துவமனைகள் சார்பில் சென்னையில் 164 இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி முடித்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் நேற்று முந்தினம் (நவ. 11) ஒரே நாளில் ஆறாயிரத்து 115 இடங்களில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் வாயிலாகவும், மூன்றாயிரத்து 122 நடமாடும் வாகனங்களின் மூலமும் மருத்துவம் அளித்ததில் இரண்டு லட்சத்து 43 ஆயிரத்து 143 பேர் பயன் அடைந்திருக்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ. 13) ஐந்தாயிரம் இடங்களில் மாபெரும் மருத்துவ முகாம்கள் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் சென்னையில் 750 இடங்களில் நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (நவ. 14) தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.
மெகா தடுப்பூசி முகாம்