தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 5000-ஐ கடந்த கரோனா! - corona cases in chennai

சென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000ஐ கடந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் 5000-ஐ கடந்த கரோனா
சென்னையில் 5000-ஐ கடந்த கரோனா

By

Published : May 14, 2020, 11:51 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக, சென்னையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 5,262ஆக அதிகரித்துள்ளது. மண்டல வாரியாக பார்க்கையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 890 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

  • திரு.வி.க.நகர் - 662 பேர்
  • கோடம்பாக்கம் - 835 பேர்
  • ராயபுரம் - 890 பேர்
  • தேனாம்பேட்டை - 564 பேர்,
  • வளசரவாக்கம் - 450 பேர்
  • அண்ணா நகர் - 448 பேர்
  • தண்டையார்பேட்டை- 402 பேர்
  • திருவொற்றியூர் -120 பேர்
  • பெருங்குடி- 64 பேர்
  • வளசரவாக்கம் - 450 பேர்
  • அடையாறு- 290 பேர்
  • ஆலந்தூர்- 61 பேர்
  • அம்பத்தூர்- 254 பேர்
  • சோழிங்கநல்லூர்- 64 பேர்
  • மாதவரம்- 72 பேர்
    சென்னையில் 5000-ஐ கடந்த கரோனா

இதுவரை 999 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து, தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். மேலும் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:தலைமைச் செயலர் எங்களை அவமதித்துவிட்டார் -டி.ஆர். பாலு குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details