சென்னை: பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவருமான வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் அங்கன்வாடி மையங்கள் அமைப்பது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "தமிழ்நாட்டில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. சொந்த கட்டடத்தில் 7,654 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
தமிழ்நாட்டில் புதிதாக 500 அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் - அமைச்சர் கீதா ஜீவன் - புதிதாக 500 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படும்
தமிழ்நாட்டில் புதிதாக 500 அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் கீழ் (ICDS), அங்கன்வாடி மையங்களை அமைக்கும் திட்டம் 1975ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துடன் கூடிய உணவுகளை வழங்குவதுடன், ஆடல், பாடலுடன் குழந்தைகளுக்கு புரியும் வகையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் செயல்படும் 54,439 அங்கன்வாடி மையங்களில், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Thirumavalaan:"திமுககாரர் போல, பேசாதீர்கள்" என்ற செய்தியாளர் - கடுப்பான திருமாவளவன்