தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவேக்ஸின் தடுப்பூசி மருந்துகள்: ஹைதராபாத்திலிருந்து சென்னை வருகை! - விமான நிலையம் வந்த கரோனா தடுப்பூசி

சென்னை: ஹைதராபாத்திலிருந்து 50 ஆயிரம் டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

50 thousand doses of covax vaccine: Arrival in Chennai from Hyderabad!
50 thousand doses of covax vaccine: Arrival in Chennai from Hyderabad!

By

Published : May 25, 2021, 3:41 PM IST

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஹைதராபாத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 10 பார்சல்களில் 290 கிலோ எடையுள்ள 50 ஆயிரம் டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை DMS வளாகத்திலுள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details