தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கையில் தப்பிய சிறை கைதிகள்.. தமிழகத்திற்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை.. - இந்தியாவுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

இலங்கையில் வன்முறை போராட்டங்கள் நடந்து வருவதால் தமிழகத்தில் ஊடுருவல்களுக்கு வாய்ப்புள்ளதாகவும், கண்காணிப்பை பலப்படுத்துமாறும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

sri lanka
sri lanka

By

Published : May 11, 2022, 3:02 PM IST

Updated : May 11, 2022, 3:28 PM IST

இலங்கை:வன்முறை மற்றும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் அகதிகள் பலர் படகு மூலமாக இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் மற்றும் உளவுத்துறை தமிழக காவல்துறை, இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக இலங்கை ஹம்பந்தோட்டா சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பித்து இருப்பதாகவும், இவர்கள் கடல் மார்க்கமாக இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் கண்காணிப்பை அதிகரிக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் உள்துறை அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும், சந்தேகம்படும் படியான படகுகள் உள்ளே நுழைந்தால் தகவல் தெரிவிக்கும்படியும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை அகதிகள் மட்டுமின்றி பல தேசவிரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் விடுதலை புலிகள் இயக்கத்தினர் மீண்டும் தமிழகத்திற்குள் நுழைந்து நிதி திரட்ட வாய்ப்பிருப்பதாகவும், போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் கும்பல் நுழைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மகிந்த ராஜபக்ச வீட்டுக்கு தீ வைப்பு... எம்எல்ஏ வீடுகளும் தீக்கிரையாகின...இலங்கையில் பதற்றம்

Last Updated : May 11, 2022, 3:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details