துபாயிலிருந்து சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனா்.
சிறப்பு விமானத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்! - 50 lakhs worth gold smuggling
சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
அப்போது, சென்னையை சேர்ந்த ஹாரூன் ரசீத் (22) மற்றும் ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது மனவை (35) ஆகியோர் மீது சுங்க அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தனியறை அழைத்து சென்று சோதனையிட்டனர்.
அதில், அவர்களுடைய உள்ளாடைகளிலும், பேண்ட் பாக்கெட்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ தங்கக்கட்டிகள், தங்க பேஸ்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம் எனக் கருதப்படுகிறது. இருவரையும் கைது செய்த சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.