சென்னை புரசைவாக்கம் பகுதியில், ஹெராயின் போதைப் பொருளுடன் இளைஞர் சுற்றித் திரிவதாக சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் புரசைவாக்கம் பிரபல துணிக்கடை அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்ததில் 50 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் ஹெராயின் போதைப் பொருள் அவரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் - இளைஞர் கைது! - போதைப்பொருள்
சென்னை: புரசைவாக்கம் பகுதியில் 50 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் சுற்றித்திரிந்த இளைஞரை சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
போதைப் பொருளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
பின்னர் அவரிடமிருந்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்த சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜு ராம் விஷ்ணோய்(39) என்பது தெரியவந்தது.