இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்திபிரதா சாகு செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவையிலிருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி வாக்குச்சாவடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மறுவாக்குப்பதிவு நடப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறைதான் எனத் தெரிவித்தார்.
கோவையிலிருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம்!
சென்னை: கோவையிலிருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி வாக்குச்சாவடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
sathyapratha sahoo
ஆனால், அந்த பகுதியில் மறுவாக்குப்பதிவு நடக்கிறதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை என விளக்கமளித்த அவர், 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவையிலிருந்து ஈரோட்டுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது தெரிவித்துள்ளார். மேலும், பாப்பிரெட்டிப்பட்டி - 8, பூந்தமல்லி - 1, பண்ரூட்டி - 1 ஆகிய பத்து வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.