சென்னை: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் அண்ணாநகர் மெயின்ரோட்டில் ஜெயமணி (59) உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம்(ஜன.4) இரவு மதுபோதையில் கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அஜித் மற்றும் கார்த்திக் இருவரும் ஐந்து சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிக் கொண்டு பணம் வந்து தருவதாக கூறியுள்ளனர்.
அதற்கு ஜெயமணி பணத்தை கொடுத்து விட்டு பார்சல் எடுத்து செல்லுங்கள் எனக் கூறியபோது அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவரது நண்பர்களை அழைத்து சென்று ஹோட்டலில் தகராறு செய்து கொதிக்கும் எண்ணெய் சட்டியை கீழே தட்டி விட்டு பொருட்களை சிதறடித்துள்ளனர்.