சென்னை:அண்ணாசாலை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரம் அண்ணா சதுக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ரவுடி மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் கொலை நடந்ததாக கூறி அண்ணாசதுக்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஸ்டாலின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது சண்முக சுந்தரத்திற்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல பிரபல தங்க நகைக் கடையை வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டி 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ரோஹினி தற்போது கஸ்தூரிபாய் மருத்துவமனை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.