தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 21, 2020, 5:02 PM IST

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

5 pm news today
5 pm news today

ரிஷிவந்தியம் எம்.எல்.ஏவுக்கு கரோனா உறுதி

ரிஷிவந்தியம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் அவர் குடும்பத்தினர் ஏழு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கரோனா தொற்று இல்லை!

சென்னை: தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கரோனா தொற்று இருப்பதாக பரவிய வதந்தியையடுத்து அவருக்கு தொற்று இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை விளக்கமளித்துள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மம்தாவை பழிவாங்குவது உறுதி - பாஜக தலைவர் சூளுரை

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் திரிணாமுல் காங்கிரஸை பழிவாங்குவோம் என பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சீனாவிடம் சரணடைந்த மோடி - ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி : சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் அந்நாட்டிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாடி ட்வீட் செய்துள்ளார்.

மன அமைதிக்கு யோகா உதவும் - குடியரசுத் தலைவர் ட்வீட்

டெல்லி : மனதை அமைதியாக வைத்துக்கொள்ள யோகாசனம் உதவும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

அரசு திட்டங்களிலிருந்து சீன நிறுவனங்களைப் புறக்கணியுங்கள் - அஜய் துவா

ஹைதராபாத் : அரசு திட்டங்களிலிருந்து சீன நிறுவனங்களை முற்றிலுமாகப் புறக்கணிப்பதே, சீனாவிற்கு பாடம் புகட்டுவதற்கான சிறந்த வழி என முன்னாள் வர்த்தக மற்றும் தொழில் துறை செயலர் அஜய் துவா தெரிவித்துள்ளார்.

தனது முதல் வெப்சீரிஸ் டீசரை வெளியிட்ட அபிஷேக் பச்சன்

மும்பை: நடிகர் அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகிவரும் 'பிரீத் – இன் டூ த ஷேடோஸ்' வெப் சீரிஸின் டீஸர் வெளியாகியுள்ளது.

'ஓடிடி தளங்கள் திரையரங்கத்தை அழிக்காது' - அனுஷ்கா ஷர்மா

நடிகை அனுஷ்கா ஷர்மா ஓடிடி தளங்களில் திரைப்படம் வெளியாவது குறித்து பேட்டி அளித்துள்ளார்.

ராஷ்போர்டின் சேவைக்கு பாராட்டு தெரிவித்த க்ளோப்!

கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியின் போது, தனது சமூக சேவைகளுக்காக மான்செஸ்டர் யுனைடெட் எஃப்சி அணியின் ஃபர்வேர்ட் வீரர் மார்கஸ் ராஷ்ஃபோர்டை(Marcus Rashford) லிவர்பூல் எஃப்சி அணையின் மேலாளர் ஜூர்கன் க்ளோப்(Jurgen Klopp) பாராட்டியுள்ளார்.

லண்டன் பூங்காவில் வெடிகுண்டு தாக்குதல்

லண்டன்: மக்கள் அதிகம் கூடும் பூங்காவில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details