தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @5PM - 5pm news today

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @5AM
5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @5AM

By

Published : Jun 7, 2020, 5:02 PM IST

Updated : Jun 7, 2020, 5:24 PM IST

1.முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு மார்ச் 24 முதல் கட்டணம் அளிக்கப்படுமா?

சென்னை: தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மார்ச் 24ஆம் தேதி முதல் கட்டணம் அளிக்கப்படுமா? என தனியார் மருத்துவமனைகள் எதிர்பார்த்து இருக்கின்றன.

2.அனுமதிக்க மறுத்த மருத்துவமனைகள்: ஆம்புலன்ஸிலேயே கர்ப்பிணி உயிரிழந்த கொடூரம்!

டெல்லி: கர்ப்பிணிக்குப் பிரசவம் பார்க்க மருத்துவமனைகள் மறுத்ததால், அவர் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3.சோனு சூட்டுக்கு ஆரத்தி எடுத்த மும்பை வாழ் தமிழர்கள்

மும்பை: மும்பையில் இட்லிக் கடை நடத்திவந்த 200 தமிழர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப உதவிய நடிகர் சோனு சூட்டுக்கு அம்மக்கள் ஆரத்தி எடுத்து நன்றி தெரிவித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

4.குடிபெயர்ந்தோருக்கு இலவச மருந்து, உணவு வழங்கும் மத்திய அரசு

டெல்லி: சாலைகளில் நடந்துச் சென்ற குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு, உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

5.போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்படும் காவிரி டெல்டா பகுதிகள்

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

6.கட்டுப்பாடுகளுடன் ஜூன் 14ஆம் தேதி சபரிமலை கோயில் திறப்பு!

திருவனந்தபுரம்: கரோனா பரவல் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய கட்டுப்பாடுகளுடன், ஜூன் 14ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.

7.மாரடைப்பால்தான் வஜித்கான் மறைந்தார் - கரோனா வதந்திக்கு குடும்பத்தினர் முற்றுப்புள்ளி

மறைந்த இசையமைப்பாளர் வஜித்கானுக்கு கரோனா தொற்று இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

8.கடந்த 74 நாள்களில் அபராதமாக ரூ.10 கோடிக்கு மேல் வசூல்!

சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 74 நாள்களில் 10 கோடியே 44 லட்சத்து 74 ஆயிரத்து 254 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

9.புது திட்டங்களை அறிவிக்க வேண்டாம் - மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

டெல்லி: மத்திய அரசு இதுவரை அறிவித்த திட்டங்களைத் தாண்டி புதிதாக எந்தவொரு திட்டத்தையும் வேறு அமைச்சகங்கள் அறிவிக்கக் கூடாது என மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

10.ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்தி கரோனாவை தடுக்கமுடியாது- ஆக்ஸ்போர்டு

லண்டன்: மலேரியா, லூபஸ் மற்றும் முடக்கு வாதத்தை சரிசெய்ய பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் கரோனா வைரஸ் நோயை தடுக்கமுடியாது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Last Updated : Jun 7, 2020, 5:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details