தென்காசி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையில் 98 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டர் பணிகளில் 28 கோடி ரூபாய்க்கான பணிகளை தவிர்த்து பணிகள் முடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, திமுக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் டெண்டர் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 98 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டு அந்த பணியில் 28 கோடி ரூபாய்க்கான பணிகளை டெண்டர் எடுக்காமலே ஒப்பந்தகாரர் பணி செய்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டது.