தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பூர் அருகே சாலையில் வீசப்பட்ட 5 மாத பச்சிளம் குழந்தை! - Fetal thrown out in Chennai

சென்னை: பெரம்பூர் அருகே சாலையில் ஐந்து மாத பச்சிளம் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5-month-old-fetal
5-month-old-fetal

By

Published : Jun 11, 2020, 7:06 AM IST

சென்னை பெரம்பூர் ராகவன் சாலைப் பகுதியில் குப்பைத்தொட்டி ஒன்றில் ஐந்து மாத பச்சிளம் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் வீசி சென்றதாகத் தெரிகிறது.

அதனை அந்தப் பகுதியிலிருந்த நாய் ஒன்று சாலையில் இழுத்துப்போட்டு கடித்துக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் நாயை விரட்டிவிட்டு, திரு.வி.க. நகர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர் ஏற்கனவே இறந்த நிலையில் இருந்த அந்தப் பச்சிளம் குழந்தையை உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அது ஆண் குழந்தை எனவும், நெகிழித்தாளால் சுற்றி அதனைக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details