சென்னை:இந்தியாவில் கல்வி கற்காமல் உள்ளவர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவைக் கற்பிப்பதற்காக ’வயது வந்தாேர் கல்வித் திட்டம்' தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் மாலை நேரங்களில் வீடுகளின் திண்ணைகளில் வயதானவர்கள் அமர வைக்கப்பட்டு, படித்தவர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. சில ஊர்களில் மின்சார தெரு விளக்கிலும் அமர வைத்துப் படிக்க வைத்தனர்.
அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு இல்லாமல் இருக்கின்றனர். இதற்காக ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட வயது வந்தோர் கல்வித்திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தன்னார்வலர்களைக் கொண்டு கற்பிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் குப்புசாமி கூறும்போது, “பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் 15 வயதிற்கும் மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன் ஆகியவை புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுத்தறிவு கற்பிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
இதையும் படிங்க:"என்எல்சி விவகாரத்தில் தெளிவான முடிவு தேவை" - கி.வீரமணி!