வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாகவே இருக்கிறது.திருவொற்றியூர், ஆர்.கே. நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர், ராயபுரம் ஆகிய தொகுதிகள் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் அடங்குகின்றன.
வடசென்னை தொகுதியில் 5 முனைப் போட்டி; தேர்தல் பரப்புரை தீவிரம்! - கலாநிதி
சென்னை: வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் இன்று 3 மணிக்கு சின்னம் ஒதுக்கிய பின்னர் தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்ததொகுதியில் 14 லட்சத்து 68 ஆயிரத்து 523 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நாடாளுமன்றத் தொகுதிக்காக திமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக56 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள், தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், திமுக வேட்பாளர் கலாநிதி, மக்கள் நீதி மையம் வேட்பாளர் ஏஜி மவுரியா, சுயேச்சையாக போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட 24 வேட்பாளர்களின்மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
திமுக மற்றும் தேமுதிக மாற்று வேட்பாளர்கள் உள்பட வேட்பாளர்கள் கூடுதலாக கொடுத்தது என 32மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.இந்த தொகுதியில் அமமுக, தேமுதிக, திமுக ஆகிய கட்சிகள் இடையேதான் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மவுரியா இளைஞர்களின் வாக்குகளை ஓரளவு பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.