சென்னை: தமிழ்நாட்ல் நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.