தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ. 5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்! - மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலர்கள்

சென்னை: குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மத்திய வருவாய் புலனாய்வுத் துறை

By

Published : Oct 9, 2019, 10:59 PM IST

சென்னை வடபெரும்பாக்கம் ஜெயா நகரில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மூத்த அலுவலர் கருணாகரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் அங்கு பலத்த சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. ஐந்து கோடி மதிப்புள்ள சுமார் 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செம்மரக்கட்டைகள், சுங்கவரி இலாகாவில் ஒப்படைக்க எடுத்துச் செல்லப்பட்டது.

இது சம்பந்தமாக அந்த குடோனின் உரிமையாளரையும் அதை வாடகைக்கு எடுத்து நடத்திய நபரையும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தேடி வருகின்றனர்.

இதையும் படியுங்க:

செம்மரக்கட்டையுடன் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details