தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் - 5 கோடி ரூபாய் போதைப்பொருட்கள்

சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனர்.

-chennai
-chennai

By

Published : Mar 19, 2020, 11:46 AM IST

Updated : Mar 19, 2020, 12:02 PM IST

சென்னை எழும்பூரில் உள்ள குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில், கூடுதல் டிஜிபி ஷகில் அக்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், சென்னை மண்ணடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருவர் அதிகளவில் போதைப்பொருள் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்டதில் சந்தேகத்திற்கிடமாக இருவர் சிக்கினர்.

குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் டிஜிபி ஷகில் அக்தர்

அவர்களை சோதனையிட்டதில் உடைமைகளில் 3 கிலோ மெத்தாஃபெட்டமைன், 1 கிலோ செரஸ், 75 கிராம் ஹெராயின் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனே அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில், ஒருவர் மண்ணடியைச் சேர்ந்த வணிகவியல் பட்டதாரி செல்வமணி, மற்றொருவர் இலங்கையைச் சேர்ந்த முகமது நிலாஃப் என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதைபொருள்களின் மதிப்பு 5 கோடி ரூபாய் எனத் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைபொருள்கள்

இதையும் படிங்க:சென்னையில் ரூ.3.4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்

Last Updated : Mar 19, 2020, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details