சென்னை: மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் தற்போது பச்சை மற்றும் நீலம் என இரண்டு வழித்தடங்கள் வாயிலாக 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக விமான நிலையம் மற்றும் பரங்கிமலை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல் விம்கோ நகர், திருவொற்றியூர், சென்னை சென்ட்ரல், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மற்றும் ஒரு வழித்தடமும் உள்ளது.
மேலும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயிலில் ஜனவரி மாதத்தில் 66 லட்சம் பயணிகள் பயணித்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 85 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். அதேபோல், தினசரி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் தினசரி 3 லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றனர்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில், “சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை விட அதிகமாக ஆகஸ்டு மாதத்தில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 215 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.