சென்னை பல்லாவரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் அங்கிருந்த காவலர்கள் விசாரணை நடத்தினார்கள்.
பல்லாவரம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை: பெண் உள்பட 5 பேர் கைது - கஞ்சா விற்றவர் கைது
சென்னை: பல்லாவரம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்துவந்த ஒரு பெண் உள்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அப்போது, அவர்கள் கையில் வைத்திருந்த இரண்டு பை களை பிரித்த பார்த்தனர். அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்ரப்புல் இஸ்லாம்(21) தஸ்லீமா(45) என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் தீவிர விசாரணையில் இவர்கள் கஞ்சா வியாபாரிகள் எனவும் இவர்கள் புறநகர் பகுதியில் பலருக்கு கஞ்சா விற்பனை செய்து தெரியவந்தது. அண்ணா நகரைச் சேர்ந்தவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக பல்லாவரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டுயிருந்தனர் என விசாரணையில் தெரிவித்தனர்.
பின்னர் காவல்துறையினர் மாறுவேடத்தில் பல்லாவரம் பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்து கஞ்சா வாங்க வந்த 3 பேரை கைது செய்தனர். அவர்கள் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கார்த்திக்(31), அஜித்குமார்(24), மனோஜ்(26) எனத் தெரியவந்தது.
மேலும் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த இருவரும் கஞ்சாவை மொத்தமாக வாங்கி சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 3 கஞ்சா வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஐந்து பேரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.