தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது - online sale

கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை ஆன்லைனில் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது
கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது

By

Published : Jun 12, 2021, 5:35 PM IST

சென்னை: வண்டலூரை சேர்ந்த சரவணன், திருவண்ணாமலையை சேர்ந்த மேத்தா மருத்துவமனை மருந்தகத்தில் பணிபுரியும் அறிவரசன், ரேலா மருத்துவமனையில் பணிபுரியும் விக்னேஷ்( நர்சிங்), மருந்தகத்தில் பணிபுரியும் தம்பிதுரை, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நிர்மல் குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் ஐந்து பேரும் சரவணனின் 'HYLO' என்ற ஆன்லைன் இணையதளத்தில் மளிகை பொருட்கள் விற்பனை செய்வது போல் வடிவமைத்து அதில் கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து இருப்பதாக பதிவிட்டுள்ளனர். அதன் விலை ரூபாய் 36,000 வரை குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இவர்களுக்கு மருந்து விநியோகம் செய்த முக்கிய நபரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பூஞ்சை, கரோனா மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி-இல் இருந்து விலக்கு

ABOUT THE AUTHOR

...view details