சென்னையில் கரோனா தொற்று தற்போது கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது.
இந்தத் தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று 499 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 53 மருத்துவ முகாம்களும் , திருக நகரில் 49 மருத்துவ முகாம்களும், தண்டயார்பேட்டையில் 48 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.