தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 49 ஐபிஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு - 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்

IPS
IPS

By

Published : Jun 2, 2021, 1:50 PM IST

Updated : Jun 2, 2021, 5:47 PM IST

13:46 June 02

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 49 ஐ.பி.எஸ் அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 14 ஐ.பி.எஸ் அலுவலர்களுக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கி பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து ஐ.ஏ.எஸ், ஐபி எஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது 49 ஐ.பி.எஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்தும்  பதவி உயர்வு வழங்கியும்  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், அமலாக்கத்துறை ஐஜியாக இருந்த செந்தாமரை கண்ணன் திருநெல்வேலி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே ஐஜியாக இருந்த வனிதா திருப்பூர் காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

திருப்பூர் காவல் ஆணையராக கார்த்திகேயன் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும், தலைமையிட ஐஜியாக இருந்த ஜோஷி நிர்மல் குமார் சிபிசிஐடி ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி ஐஜியாக இருந்த தேன்மொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல நஜ்மல் ஹூடாவை சேலம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தொழிற்நுட்ப பிரிவு டிஐஜியாக இருந்து வந்த ராஜேந்திரன் சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராகவும், கோயம்புத்தூர் சரக டிஐஜியாக இருந்து வந்த நரேந்திர நாயர், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டி ஐஜியாக இருந்து வந்த லலிதா லஷ்மி சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராகவும், திருப்பூர் எஸ்.பியாக இருந்து வந்த தீஷா மிட்டல் மயிலாப்பூர் துணை ஆணையராகவும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

அமலாக்கத்துறை எஸ்.பியாக இருந்த குமார் சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல துணை ஆணையராகவும், சேலம் எஸ்.பியாக இருந்து வந்த தீபா கனிகர் அண்ணா நகர் துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  

புதுக்கோட்டை எஸ்.பியாக இருந்த பாலாஜி சரவணன் சென்னை தலைமையக துணை ஆணையராகவும், எஸ்.பி மகேந்திரன் நிர்வாகத் துறை துணை ஆணையராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்காக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன் குமார் அபினபு மீண்டும் அதே பதவியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். தலைமையக டிஐஜியாக இருந்து வந்த மகேஷ்வரி சேலம் சரக டிஐஜியாக பணியிட மாற்றப்பட்டுள்ளார்.  

லஞ்ச ஒழிப்புத்துறை டி ஐஜியாக இருந்த ராதிகா திருச்சி சரக டிஐஜியாகவும், வேலூர் சரக டிஐஜியாக இருந்த காமினி, மதுரை சரக டிஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் சரக டிஐஜியாக இருந்து வந்த ரூபேஷ் குமார் மீனா சென்னை சிபிசிஐடி டி ஐஜியாகவும், திருச்சி சரக டி ஐஜியாக இருந்து வந்த ஆனி விஜயா சென்னை நிர்வாகத்துறை டி ஐஜியாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் சரக டிஐஜியாக இருந்த சாமூண்டீஸ்வரி சென்னை தலைமையக இணை ஆணையராகவும், திண்டுக்கல் சரக டிஐஜியாக இருந்து வந்த முத்துசாமி கோயம்புத்தூர் சரக டிஐஜியாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அதே போல் 14 ஐபிஎஸ் அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பணியிடங்களை அரசு ஒதுக்கியுள்ளது. இணை ஆணையராக இருந்த பாலகிருஷ்ணன் ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதீப் குமார் பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராகவும், சுதாகர் மேற்கு மண்டல ஐஜியாகவும், அயல் பணியில் இருக்கக்கூடிய அமித் குமார் சிங், அஷ்வின் எம்.கொட்னீஸ் ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதே போல் பதவி உயர்வு பெற்று கார்த்திகேயன் கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதீப் சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு துணை ஆணையராகவும், பிரபாகரன் பதவி உயர்வு பெற்று காவல்துறை விரிவாக்க துறை டி.ஐ.ஜியாகவும், கயல்விழி திருச்சி ஆயுதப்படை பிரிவு டி.ஐஜி,சின்னசாமி கடலோர பாதுகாப்பு குழுமம் டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அயல் பணியில் இருக்கக்கூடிய சரவணன், சேவியர் தன்ராஜ், அனில் குமார் கிரி ஆகிய மூவருக்கும் டி.ஐ.ஜி பதவி உயர்வு வழங்கப்பட்டு அதே பணியில் தொடர்வார்கள். தஞ்சாவூர் சரக டிஐஜியாக பர்வேஷ் குமார் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Last Updated : Jun 2, 2021, 5:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details