சென்னை: தமிழ்நாட்டில்10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையையும் பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நடைபெறும். அதன் பின் எழுத்துத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 26 லட்சத்து 76ஆயிரத்து 718 மாணவர்கள் எழுத உள்ளனர். இவர்களில் 13.3 லட்சம் மாணவர்கள் தமிழ் வழியில் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் 17 மாவட்டங்களில் 54 அரசுப்பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆங்கில வழியிலான கல்வி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
பொதுத்தேர்வை எழுத உள்ள 10,11,12 ஆகிய மூன்று வகுப்புகளிலும் சேர்த்து 49.68 விழுக்காடு மாணவர்கள் தமிழ் வழியில் தேர்வு எழுத உள்ளனர். மீதமுள்ள மாணவர்கள் ஆங்கில வழியில் தேர்வு எழுதுபவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
10ஆம் வகுப்புத்தேர்வை 9 லட்சத்து 55 ஆயிரத்து 476 மாணவர்களும், 10ஆம் வகுப்புத்தேர்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து 925 மாணவர்களும், 12ஆம் வகுப்புத் தேர்வை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 மாணவர்களும் என மொத்தம் 26 லட்சத்து 76 ஆயிரத்து 718 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்கள்