தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 477 பேருக்கு கரோனா பாதிப்பு - கரோனா பாதிப்பு செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 477 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

coronavirus
கரோனா பாதிப்பு

By

Published : Feb 6, 2021, 8:05 PM IST

மக்கள் நல்வாழ்வுத்துறை பிப்ரவரி 6ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 53 ஆயிரத்து 256 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் புதிதாக 477பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணைக்கை 8 லட்சத்து 41 ஆயிரத்து 326 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் தற்போது 4 ஆயிரத்து 417 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 503 பேர் குணமடைந்து இன்று (பிப்.6) வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 24 ஆயிரத்து 527 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 2 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 1 நோயாளிகள் என மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 382 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு

  • சென்னை - 2,32,168
  • கோயம்புத்தூர் - 54,753
  • செங்கல்பட்டு - 51,764
  • திருவள்ளூர் - 43,695
  • சேலம் - 32,486
  • காஞ்சிபுரம் - 29,320
  • கடலூர் - 24,985
  • மதுரை - 21,076
  • வேலூர் - 20,795
  • திருவண்ணாமலை - 19,394
  • தேனி - 17,101
  • தஞ்சாவூர் - 17,776
  • திருப்பூர் - 18,014
  • விருதுநகர் - 16,591
  • கன்னியாகுமரி - 16838
  • தூத்துக்குடி - 16,289
  • ராணிப்பேட்டை - 16,144
  • திருநெல்வேலி - 15,617
  • விழுப்புரம் - 15,203
  • திருச்சிராப்பள்ளி - 14,750
  • ஈரோடு -14,487
  • புதுக்கோட்டை - 11,581
  • கள்ளக்குறிச்சி - 10,883
  • திருவாரூர் - 11,232
  • நாமக்கல் - 11,678
  • திண்டுக்கல் - 11,294
  • தென்காசி - 8,440
  • நாகப்பட்டினம் - 8,486
  • நீலகிரி - 8,240
  • கிருஷ்ணகிரி - 8,089
  • திருப்பத்தூர் - 7,593
  • சிவகங்கை - 6,681
  • ராமநாதபுரம் - 6,423
  • தருமபுரி - 6,600
  • கரூர் - 5,425
  • அரியலூர் - 4707
  • பெரம்பலூர் - 2,269

பயணிகள் விவரம்

  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 941
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1039
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க:’நாடு முழுவதும் 54 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி’: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

ABOUT THE AUTHOR

...view details