தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் ஒரே நாளில் 4,734 பேருக்குக் கரோனா உறுதி!

சென்னை: கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (மே 27) ஒரே நாளில் 4 ஆயிரத்து 734 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் ஒரே நாளில் 4,734 பேருக்கு கரோனா உறுதி!
கோவையில் ஒரே நாளில் 4,734 பேருக்கு கரோனா உறுதி!

By

Published : May 27, 2021, 9:52 PM IST

கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், என்றும் எதிர்பாராத அளவிற்கு கோயம்புத்தூரில் இன்று (மே 27) ஒரே நாளில் 4 ஆயிரத்து 734 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் சென்னையில் புதிதாக 2ஆயிரத்து 719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆயிரத்து 361 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடிய 64 லட்சத்து 2 ஆயிரத்து 773 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 19 லட்சத்து 78 ஆயிரத்து 621 நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சுமார் 3 லட்சத்து 13 ஆயிரத்து 48 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 30 ஆயிரத்து 63 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 43 ஆயிரத்து 284 என உயர்ந்துள்ளது. மேலும், 474 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 289ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

சென்னை - 4,93,881

செங்கல்பட்டு - 1,35,289

கோயம்புத்தூர் -1,55,820

திருவள்ளூர் - 97,566

சேலம் - 60,689

காஞ்சிபுரம் - 60,789

மதுரை - 61,478

கடலூர் - 46,137

திருச்சிராப்பள்ளி - 52,563

திருப்பூர் - 54,524

தூத்துக்குடி - 45,035

திருநெல்வேலி - 41,670

வேலூர் - 40,488

தஞ்சாவூர் - 44,093

ஈரோடு - 49,685

கன்னியாகுமரி - 45,069

திருவண்ணாமலை - 39,029

தேனி - 34,211

ராணிப்பேட்டை - 32,718

விருதுநகர் - 35,053

விழுப்புரம் - 31,954

கிருஷ்ணகிரி - 30,810

நாமக்கல் - 28,681

திண்டுக்கல் - 25,576

திருவாரூர் - 27,495

நாகப்பட்டினம் - 26,299

புதுக்கோட்டை - 21,424

கள்ளக்குறிச்சி - 19,833

தென்காசி - 20,995

திருப்பத்தூர் - 21,012

நீலகிரி - 16,985

தருமபுரி - 17,265

ராமநாதபுரம் - 15,581

கரூர் - 15,233

சிவகங்கை - 13,599

அரியலூர் - 10,238

பெரம்பலூர் - 7,305

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,004

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ABOUT THE AUTHOR

...view details