அமெரிக்காவின் சிக்காகோ நகரிலிருந்து 76 இந்தியர்களும், சாா்ஜாவிலிருந்து 178 இந்தியர்களும் துபாயிலிருந்து 180 இந்தியர்களும், இலங்கையிலிருந்து 37 இந்தியர்களும் நான்கு சிறப்பு மீட்பு தனி விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டனர்.
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 471 போ் மீட்பு - அமெரிக்கா, துபாய், சாா்ஜா, இலங்கை
சென்னை: அமெரிக்கா, துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களில் 471 பேர் மீட்கப்பட்டு நான்கு சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அமெரிக்கா,துபாய்,சாா்ஜா,இலங்கை நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியா்களில் 471 போ் மீட்கப்பட்டு 4 சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்
இவர்களுக்கு விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் இவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த சென்னை நகரில் உள்ள ஹோட்டல்களுக்கும், இலவச தங்கும் இடங்களுக்கும் அனுப்பப்பட்டனர்.