நாடு முழுவதிலும் உள்ள அரசு, சுயநிதி கல்லூரிகளில் பொது மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் (பி.டி.எஸ்.) என மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்காக தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் தகுதிகாண் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு மே 5, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் 14.10 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று பகல் 2மணிக்கு வெளியானது.
நீட் தேர்வில் தமிழ்நாட்டில் 48.57% தேர்ச்சி! - நீட் தேர்வு முடிவுகள்
டெல்லி: தமிழ்நாட்டில் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில் அதிகபட்சமாக டெல்லியில் 74.92 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 59,785 பேர் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளனர். இது சதவிகிதத்தில் 48.57 ஆகும். இது கடந்த ஆண்டை காட்டிலும் 9.01% அதிகமாகும்.
மேலும் மாநில அளவில் ராஜஸ்தான் மாணவர் முதல் இடத்தையும், டெல்லி, உத்தரபிரதேச மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் முதல் 50 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் இடம் பெறவில்லை. தமிழ்நாட்டில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ள ஸ்ருதி மாணவி தேசிய அளவில் 57வது இடம் பிடித்துள்ளார்.