தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளியையொட்டி தமிழகத்தில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம் தகவல்! - Diwali

TASMAC Sales: தீபாவளி மற்றும் தீபாவளிக்கு முந்தைய நாள், என இரண்டு நாட்களில் தமிழகத்தில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

467 crore worth of alcohol sales in tamilnadu ahead of diwali
தமிழகத்தில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 12:54 PM IST

சென்னை: நாடு முழுவதும் நேற்று (நவ.12) தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, வான வேடிக்கைகள், கொண்டாட்டங்கள் என்பதெல்லாம் இருந்தாலும் கூட வருடம்தோறும் தீபாவளி பண்டிகையின் போது மது விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

இந்த வருடம் தீபாவளி மற்றும் தீபாவளிக்கு முந்தைய நாள் ஆகிய இரண்டு நாட்களில் மது விற்பனையானது தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் ரூ.50 கோடிக்கும் குறைவில்லாமல் மது விற்பனை ஆகி உள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரையில் மட்டும் இரண்டு நாட்களில் ரூ.104.70 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முந்தைய நாள் (நவ.11) அன்று ரூ.220.85 கோடிக்கும், தீபாவளியன்று (நவ.12) ரூ.246.78 கோடிக்கும் மது விற்பனை ஆகி உள்ளது. இந்த இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.467.15 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது.

இதில், நவம்பர் 11ஆம் தேதி அன்று சென்னையில் ரூ.48 கோடிக்கும், திருச்சியில் ரூ.40.02 கோடிக்கும், சேலத்தில் ரூ.39.78 கோடிக்கும், மதுரையில் அதிகபட்சமாக ரூ.52.73 கோடிக்கும், கோயம்புத்தூரில் ரூ.40.20 கோடிக்கும் என மொத்தம் ரூ.220.85 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது.

தீபாவளி பண்டிகை தினமான நேற்று (நவ.12), சென்னையில் ரூ.52.08 கோடிக்கும், திருச்சியில் அதிகபட்சமாக ரூ.55.60 கோடிக்கும், சேலத்தில் ரூ.46.62 கோடிக்கும், மதுரையில் ரூ.51.97 கோடிக்கும், கோயம்புத்தூரில் ரூ.39.61 கோடிக்கும் என மொத்தம் ரூ.246.78 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது.

கடந்த நவ.11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்களில் அதிகபட்சமாக மதுரையில் ரூ.104.70 கோடிக்கும், குறைந்தபட்சமாக கோயம்புத்தூரில் ரூ.79.81 கோடிக்கும் மது விற்பனை ஆகி உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஹைதராபாத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து - 7 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details