சென்னை:குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் 445 இளம் இசை கலைஞர்கள் பங்கேற்று கீ போர்டு வாசிக்கும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சீர்காழி சிவசிதம்பரம், கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குநர் காந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், தமிழ்நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து இசையுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் தாய் மண்ணே வணக்கம் என்ற பாடலுக்கு இசை கலைஞர்கள் கீ போர்டு இசைத்தனர். மேலும் இளையராஜா இசையமைத்த பாடலையும் வாசித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. குழந்தை தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு தற்போது அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது.