உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100-க்கும் மேலாக உயர்ந்துள்ளது.
கரோனா அச்சம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் வெறுமையாகக் காணப்படுகிறது. இதனால், இன்று மட்டும் 62 விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டுள்து.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள்
- இலங்கைக்குச் செல்லும் நான்கு விமானங்கள், குவைத்துக்குச் செல்லும் மூன்று விமானங்கள், தோகா, சிங்கப்பூா், ஜெர்மனி, துபாய், மஸ்கட், பக்ரைன், ஹாங்காங், மலேசியா, செயிண்ட் டெனிஸ் ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு வரும் 23 விமானங்களும், இங்கிருந்து அந்நாடுகளுக்குச் செல்லும் 23 விமானங்களும் என சுமாராக 46 சர்வதேச விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளன.
- இதைப் போலவே, போதிய பயணிகள் இல்லாமல் சென்னையிலிருந்து பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, மும்பை, புனே, தூத்துக்குடி, திருச்சி, கோவா ஆகிய இடங்களுக்குச் செல்லும் எட்டு விமானங்களின் சேவையும், இந்த நகரங்களிலிருந்து சென்னைக்கு வரும் எட்டு விமானங்களின் சேவையும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அரசு உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளி!