தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ரூ.4,321 கோடி நிலுவைத் தொகையை ஒரே தவணையாக வழங்குக' - Jayakumar

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையை வழங்க மத்திய அரசுக்கு தார்மீக மற்றும் சட்டப்பூர்வமான கடமை உள்ளது என்பதே எங்கள் நிலைப்பாடு என அமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்டி கூட்டத்தில் தெரிவித்தார்.

GST
GST

By

Published : Oct 5, 2020, 10:51 PM IST

சென்னை: கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் நிதிச்சுமையைக் குறைக்க அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, தமிழ்நாட்டிற்கு ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ள ரூ.4,321 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 42ஆவது கூட்டம் காணொலி வழியாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். மேலும், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ். கிருஷ்ணன், முதன்மைச் செயலர்/வணிகவரி ஆணையர் எம்.ஏ. சித்திக் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்:

ஜூன் 12 அன்று நடைபெற்ற 40ஆவது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக்கூட்டம் மற்றும் ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்ற 41ஆவது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டத்தின் வரைவு அறிக்கைகளை (Draft Minutes) நான் இங்கு உறுதிப்படுத்துகிறேன்.

2017-18ஆம் ஆண்டில் வழங்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தீர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு தனது அறிக்கையை முடிவு செய்து, தமிழ்நாட்டிற்கு ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நிலுவையாக ரூ.4,321 கோடி வழங்கப்பட வேண்டும் என ஒப்புக் கொண்டுள்ளது. அமைச்சர்கள் குழு பரிந்துரையின்படி, தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையினை ஒரே தவணையில் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இது கோவிட்-19 நோய் தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் நிதிசுமையை குறைக்க இம்மாநிலத்திற்கு பேருதவியாக இருக்கும். எனவே, அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்று அதை செயல்படுத்தி நிதியை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டிற்கு 2020-21ஆம் ஆண்டில், ஜூலை 2020 வரையிலான காலத்திற்கு ரூ.12258.94 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டியுள்ளது. கோவிட்-19 நோய் தொற்றை எதிர்த்து போராட சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது மிகவும் அவசியமாகும்.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையை வழங்க மத்திய அரசுக்கு தார்மீக மற்றும் சட்டபூர்வமான கடமை உள்ளது என்பதே எங்கள் நிலைப்பாடு. மேல்வரி வசூலில் பற்றாக்குறை ஏற்பட்டால், மாநிலங்களுக்கு ஈடுசெய்ய தேவையான நிதியை இந்திய அரசு அடையாளம் காண வேண்டும் என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்டி, 41ஆவது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டத்தின் வாயிலாக, இந்திய அரசு நிதி ஆதாரங்களை திரட்டி, தேவையான நிதியை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு நிதியத்திற்கு வழங்க முடியும் என்று நான் பரிந்துரைத்தேன்.

2021-22 ஆம் ஆண்டிற்கு பிறகும் சில ஆண்டுகளுக்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் மேல்வரியை நீட்டித்துகடனை வழங்க முடியும். இது அனைத்து மாநிலங்களும் ஒப்புக் கொண்ட ஒரு நியாயமான மற்றும் நடைமுறைபடுத்தக்கூடிய ஆலோசனையாகும். இதன் தொடர்பாக, நமது முதலமைச்சர், பாரத பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று தெரிவித்தார். சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் அடித்தளமாக இருக்கும் பரஸ்பர நம்பிக்கையைப் பாதுகாத்து, உரிய நேரத்தில் மாநிலத்திற்கு இழப்பீடு வழங்குவதிலும், ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் நிலுவைத் தொகையை விரைவாக அளித்திட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details