சென்னை விமான நிலையத்தில் மூன்றாவது நாளான இன்று 42 உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. அதில் 21 விமானங்கள் டெல்லி, அந்தமான், கவுகாத்தி, ராஜ்கோட், ஹைதராபாத், பெங்களூரு, மங்களூரு, விசாகப்பட்டினம், கடப்பா, மதுரை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்கின்றன. அதேபோல் 21 விமானங்கள் மேற்கூறிய அந்தந்த நகரங்களிலிருந்து சென்னைக்கு வருகின்றன.
சென்னையில் இன்று 42 விமான சேவைகள் இயக்கம்
சென்னை விமான நிலையத்தில் 3ஆவது நாளாக இன்று, 42 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
chennai-air-port
சேலம், கடப்பாவிற்கு இன்று முதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதையடுத்து போதிய பயணிகள் இல்லாததால் திருச்சி, தூத்துக்குடிக்கு சென்னையிலிருந்து இன்று விமானங்கள் இயக்கப்பட்டவில்லை. அதேபோல மும்பை, கொல்கத்தா நகரங்களுக்கு 3ஆவது நாளாக இன்றும் சென்னையிலிருந்து விமான சேவைகள் இயக்கப்படவில்லை. இன்று காலை 6.30 மணிக்கு முதல் விமானமாக இண்டிகோ ஏா்லைன்ஸ், 109 பயணிகளுடன் டெல்லி புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க:அவசரமாக தரையிறங்கிய ஏர்ஏசியா விமானம்!