தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளிகளுக்கு 419 கோடி ரூபாய் நிதி - தமிழ்நாடு அரசுக்கு கடிதம் - chennai district news

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக 2020-21ஆம் கல்வியாண்டுக்காக 419 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டுமென மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

419 கோடி ரூபாய் நிதி
419 கோடி ரூபாய் நிதி

By

Published : Sep 23, 2021, 6:05 PM IST

சென்னை :இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை ஒன்றிய, மாநில அரசுகள் வழங்குகின்றன. அதன்படி எட்டாம் வகுப்புவரை படித்து வரக்கூடிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணமாக 2020-21 கல்வியாண்டு கட்டணமாக 419 கோடி ரூபாய் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் இந்த நிதியை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்பதால், அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து தனியார் பள்ளிகளுக்கான நிதி பகிர்ந்து அளிக்கப்படும் என்று இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 15 ஆயிரம் இடங்களில் 55 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளது என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : பள்ளிகள் திறப்பு: அமைச்சரின் பதில் என்ன?

ABOUT THE AUTHOR

...view details