தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை சோதனையில் 41பேர் கைது! - சட்டவிரோத மதுபானங்கள்

சென்னையில் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனையை ஒழிக்கும் பொருட்டு நடைபெற்ற சிறப்பு சோதனையில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 41 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், சோதனையில் 581 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கம் 11 ஆயிரத்து 490 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை சோதனையில் 41பேர் கைது!
சென்னையில் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை சோதனையில் 41பேர் கைது!

By

Published : Jun 12, 2022, 8:34 AM IST

சென்னை:மாவட்டதில்சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின் அடிப்படையில், அந்தந்த பகுதி காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் சட்ட விரோத மதுபானங்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, நேற்று இரவு முதல் இன்று காலை வரை மதுபான கூடங்கள் மற்றும் இதர இடங்களில் காவல் துறையினர் மூலம் சென்னை முழுவதும் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு சோதனையில் மதுபானக் கூடங்கள் மற்றும் இதர இடங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தது தொடர்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 41 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடமிருந்து 581 மது பாட்டில்கள் மற்றும் ரொக்க பணமாக 11 ஆயிரத்து 490 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் காவல் துறையினர் மூலம் தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:திமுக பாஜகவின் பி டீம் இல்ல... அவங்கதான் மெயின் டீம் - சீமான்

ABOUT THE AUTHOR

...view details