தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே தற்போதைய தேவை - ஹன்ஸ் ராஜ் வர்மா - ஹன்ஸ் ராஜ் வர்மா

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், பல்வேறு பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது தான் தற்போதைய தேவை என தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாண் இயக்குநர் ஹன்ஸ் ராஜ் வர்மா தெரிவித்துள்ளார்.

chennai
ஹன்ஸ் ராஜ் வர்மா

By

Published : Jul 14, 2021, 6:28 AM IST

சென்னை:தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) 40 ஆவது நிறுவன தின நிகழ்ச்சி காணொலி மூலம் நடைபெற்றது.

அதில், விவசாயிகள் மீது சிறப்பு கவனம், வங்கி கடனை உயர்த்துதல், ஊரக உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கடந்த 40 ஆண்டுகளில் நபார்டு செய்துள்ள சாதனைகள் குறித்து விளக்கப்பட்டது.

வங்கிகளுக்குக் கவுரவம்

சிறப்பான செயல்பாட்டிற்காக பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை கவுரவிக்கப்பட்டன.

தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிறுவன தினம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக இந்தியன் வங்கி செயல் இயக்குநர் இம்ரான் அமின் சித்திக்கின் முன்னிலையில் நபார்டு மற்றும் இந்தியன் வங்கிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இறையன்பு பாராட்டு

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, " 2021 நிதியாண்டில் நபார்டின் பங்களிப்பான 27,135 கோடி ரூபாய் குறித்தும், நடப்பாண்டுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மேலாண் இயக்குனர் ஹன்ஸ் ராஜ் வர்மா

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தின் (TIIC) நிர்வாக இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா, "வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், பல்வேறு பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவதும் தான் தற்போதைய தேவை.

நபார்டு விரிவுபடுத்தியுள்ளதாகவும், ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி மற்றும் நபார்டு உள்கட்டமைப்பு வளர்ச்சி உதவி ஆகியவற்றின் கீழ் மாநிலத்தின் ஊரக உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நிதி உதவியை குறிப்பிடத்தகுந்த அளவு உயர்த்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 20% உயர்வு

ABOUT THE AUTHOR

...view details