சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தங்கம் இறக்குமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம், சுரானா பவர் லிமிடெட் மற்றும் சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை வங்கிகளிடமிருந்து 4,000 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் ஐடிபிஐ வங்கியில் 1,301.76 கோடி ரூபாய் கடனும், சுரானா பவர் லிமிடெட் சார்பில் 1,495.76 கோடி ரூபாய் கடனும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 1,188.56 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாகவும், இந்த கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை என கூறி அந்த நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.