சென்னை:தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2-வது சுற்றுக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையிலும், 827 இடங்களில் 376 இடங்கள் காலியாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 753 இடங்களும், கே.கே நகர் இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரியில் 44 இடங்களும் , 2 அரசுப் பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்களில் 30 இடங்கள் என அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 15 சதவீதத்தில் 827 இடங்கள் உள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் MBBS, BDS படிப்பில் 40% இடங்கள் காலி! - bds and mbbs counselling
அகில இந்திய அலவிலான ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் 40 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கான முதற்கட்டக் கலந்தாய்வு அக்டேபார் 11 முதல் 20 வரையிலும், 2-ஆம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில் கலந்துக் கொண்டு இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களில் எம்பிபிஎஸ் படிப்பில் 468 மாணவர்களும், பிடிஎஸ் படிப்பில் 3 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். தற்பொழுது 376 இடங்கள் காலியாக உள்ளது.
இதையும் படிங்க: ரூ.15.40 கோடி செலவில் விவசாயிகளுக்கான திட்டத்தை தொடங்கி வைத்த CM