சென்னை விமான நிலைய பன்னாட்டு சரக்குப் பிரிவில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர சோதனையில் ஈடுபட்ட அலுவலர்கள், நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலில் திருமண அழைப்பிதழ்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிப்பதைக் கண்டு சந்தேகமடைந்தனர்.
இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் பாா்சலை பிரித்து பாா்த்தபோது, அதன் உள்ளே நீல நிறத்தில் புளூ பனிஷாா் என்ற போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 400 கிராம் போதை மாத்திரைகளையும் கைப்பற்றிய அலுவலர்கள், அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் என கணக்கிட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த சுங்கத்துறை அலுவலர்களின் முதற்கட்ட விசாரணையில், கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த ரிஷிகேஷ்(23) என்பவர் ஆர்டர் முறையில் மாத்திரைகளை வரவழைத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்ட புளூ பனிஷர் போதை மாத்திரைகள் அதில், பெங்களூருவிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ரிஷிகேஷ் பயின்றுவருவதும், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்த போதை மாத்திரைகளை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட்டங்களுக்காக பயன்படுத்த வரவழைத்ததும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:கொரோனா அச்சம்: கர்நாடகாவில் மால்கள் மற்றும் திரையரங்குகள் மூடல்