தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் விசிறியின் ஸ்விட்ச்சை தொட்ட சிறுவன் - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - 4 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை: சூளைமேடு அருகே 4 வயது சிறுவன் பலத்த மழையின்போது மின் விசிறி ஸ்விட்ச்சை தொட்ட நேரம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

A four-year-old boy has died after being electrocuted
Small boy dead by electrocuted in chennai

By

Published : Aug 12, 2020, 3:32 PM IST

சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் 3ஆவது நகரைச் சேர்ந்தவர் தஷ்ணாமூர்த்தி. இவருக்கு 4 வயதில் தர்னேஷ்வரன் என்ற மகன் உள்ளார்.

சூளைமேட்டில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் தஷ்ணாமூர்த்தி இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சென்னை முழுவதும் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தஷ்ணாமூர்த்தியின் மகன் தர்னேஷ்வரன், மின் விசிறி ஸ்விட்ச்சைப் தொட்டுள்ளார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கியதில் சிறுவன் மயங்கி கீழே விழுந்துள்ளான்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனே தர்னேஷ்வரனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சூளைமேடு காவல் துறையினர் சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details