சென்னை மதுரவாயல் வேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் மதுரையில் ஆர்.எம்.கே. மார்டன் ரைஸ் மில் என்கிற நிறுவனத்தை நடத்திவருகிறார். அதன் கிளை நிறுவனம் மதுரவாயலில் இயங்கிவருகிறது. இதில் சுரேஷ், பாபு, அய்யப்பன், லட்சுமணன் ஆகிய நான்கு பேரும் விற்பனை பிரதிநிதிகளாக வேலை புரிந்துவருகின்றனர். இவர்கள் ஓட்டல், கடைகளுக்கு மொத்தமாக அரசி ஆர்டர் செய்து அதற்கான தொகையை வசூல் செய்து நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் கட்டி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற 28 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் தொகையை நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் கட்டாமல் இருந்துள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் உரிமையாளர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.