தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலில் குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் மாயம் - தேடுதல் பணி தீவிரம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காசிமேடு கடலில் குளிக்கச் சென்ற ஐந்து பேர் ராட்சத அலைகளால் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை கடலில் குளிக்க சென்ற நான்கு மாணவர்கள் மாயம்
சென்னை கடலில் குளிக்க சென்ற நான்கு மாணவர்கள் மாயம்

By

Published : Nov 15, 2020, 9:31 PM IST

சென்னை, ராயபுரம் கப்பல் தெரு பகுதியைச் சேர்ந்த சிலர் தீபாவளி விடுமுறையை கழிப்பதற்காக காசிமேடு கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்றனர். அப்போது, கரோனா கட்டுப்பாடுகளை மீறி 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கடலில் குளித்துக் கொண்டிருக்கையில், எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி 5 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மீனவர்கள் கடல் அலையில் சிக்கிகொண்ட 19 வயது இளைஞரை மட்டும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் துரிதர்ஷ்டவசமாக அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் காணாமல் போன 14 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்களை தேடும் பணியில், தீயணைப்பு துறையினரும், பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டு வந்தனர். இரவு நேரம் என்பதால் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைந்த பின்பு மீண்டும் தேடுதல் பணி நடைபெறும் என மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கொண்டாட்டத்திற்காக, கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் கடலில் மாயமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தீபாவளி விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

ABOUT THE AUTHOR

...view details